கர்நாடக சங்கீதத்தில் ஸ்ருதியோடு பாடுவது என்பது தான் மிகவும் முக்கியமான படிப்பு, புரிதல், அறிதல் எல்லாமே.. ஆனால் அதை பயிற்றுவிப்பது தான் கடினமான வேலை.. இசை கற்பவர் self exploration செய்து கற்க வேண்டிய உத்தி.. ஓரளவு ஏழு ஸ்வரஸ்தானங்கள் பற்றிய புரிதல் வரும்போது சற்றே ஸ்ருதி பற்றிய ஞானம் பிறக்கும் .. இசை கற்கும் ஒருவர் ஒரே ஸ்ருதியில் நுழைந்து, இழைந்து திரும்ப திரும்ப ஏழு ஸ்வரங்களைப் பாடும்போது
மெல்ல மெல்ல ஸ்ருதி பற்றிய புரிதல் வரும்.. ஆனால் அதற்கு அன்றாட பயிற்சி அவசியமாகிறது.. Voice Warm up செய்வதற்கே சில நிமிடங்கள் பிடிக்கும்.. அதன் பிறகு தான் பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.. மெல்ல மெல்ல ஸ்ருதி பற்றிய புரிதல் வரும்போது 12 ஸ்வரஸ்தானங்கள் பற்றி கற்க ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக ஒவ்வொரு ஸ்வரமும் Different Personality கொண்ட வெவ்வேறு மனிதர்கள்.. அவர்களுடன் போதுமான அளவு நேரம் செலவு செய்தால் மட்டுமே அவர்களை புரிந்துகொள்ள முடியும்.. மேலோட்டமான அடிப்படை அறிவு பாடுவதற்கான தளத்தை விருத்தி செய்ய உதவாது.. ஆகவே மெல்ல நகரும் ஓடத்தின் மீது ஏறி அமர்ந்து "அடிப்படைப் பாடம்" என்ற நதியில் திளைத்து,பயணித்து கர்நாடக இசை (Carnatic Music) என்னும் சமுத்திரத்தின் வாசலைக் கண்டடைவோம் 😌
கருத்துகள்
கருத்துரையிடுக