அரைகுறை நீச்சல் அறிவோடு ஒரு கையால் வாழ்க்கை என்னும் ஓடத்தை பற்றிக் கொண்டே உன் குழந்தைக்கு நீந்தக் கற்றுக்கொடுப்பது போன்றது parenting என்னும் art. You can never be Master in it because you are not trained for it. Everyday is a new day and before you get a hold of it, another Child will come into your space and call you as a grand parent :)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, முதுமொழிக்காஞ்சி யில் சில சுவாரஸ்யமான பழமொழிகள் உள்ளன, நீட்டி முழக்கி சொல்லும் பாடல்கள் அல்ல இவை, சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்பவை (Short and Sweet), இதில் மொத்தம் 100 பழமொழிகள் கூறப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். இந்தப்பதிவில், என்னைக் கவர்ந்த பத்து பாடல்கள் பற்றிப் பார்ப்போம். அவை தண்டாப்பத்து என்ற அதிகாரத்தில் உள்ளன ( 91 - 100) . தண்டா என்றால் நீக்கம் என்பது பொருள் .. தண்டான் என்றால், விலக்க மாட்டான், வழுவாது நிற்பான் ,நீக்க மாட்டான் என்பன போன்ற பொருளைக் குறிக்கும். நமக்கு என்ன வேண்டுமோ, எதை விரும்புகின்றோமோ, அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என தண்டாப்பத்துப் பேசுகிறது ! ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்! கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் (உலகத்துக்கு ஒரு BUILD-UP வேணாமா? ராஜராஜ சோழ, ராஜ மார்த்தாண்ட என்ற தொனி ஞாபகம் வருகிறதா? ), எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன்,பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை கைவிட மாட்டான்...யோசித்து
கருத்துகள்
கருத்துரையிடுக