ஸ்வராவளி வரிசைகள்
ஏழு ஸ்வரங்கள் இருப்பது நமக்குத் தெரிந்ததே. அவற்றின் முழு பெயர்கள்:
ஸ – ஷட்ஜம்
ரி – ரிஷபம்
க – காந்தாரம்
ம – மத்யமம்
ப – பஞ்சமம்
த – தைவதம்
நி – நிஷாதம்
இவை கர்நாடக இசைக் கூறுகளில் முக்கியமாக வகிக்கின்றது. இந்த ஒவ்வொறு ஸ்வரமும் ஒரு ஒலியமைப்பே ஆகும். இவற்றிற்கு தனி அலைவரிசை உண்டு. இதே போல் தமிழிசையிலும் இதற்கான சமமான ஒலி அலைவரிசைகளை பகுத்துள்ளனர். அவை:
ஸ – குரல்
ரி – துத்தம்
க – கைக்கிளை
ம – உழை
ப – இளி
த – விளரி
நி – தாரம்
இதைச் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில்:
குரறுத்த நான்கு கிளைமூன் றிரண்டாங்
குரையா வுழையிளி நான்கு-விரையா
விளரியேனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
களரிசேர் கண்ணுற் றவர்
இந்த ஏழு ஸ்வரங்களில் ஸ, ப ஆகிய இரண்டும் நிலை ஸ்வரங்கள் எனக் கூறப்படும். அதாவது இவை மாறுதல் இல்லாத ஸ்வரங்கள். அப்படியென்றால் என்ன? ஸ மற்றும் ப சுரங்கள் முழுமையான சுரங்கள்.
அலைவரிசை அல்லது அசைவு எண்கள் (Frequency Hz) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ச ரி க ம ப த நி ச்
240 256 300 320 360 384 450 480
ஆரோகனம் – சுரங்கள் மற்றொன்றைவிட அதிகரித்துச் செல்லும்போது ஆரோகனம் என்று பெயர். தமிழிசையில் இதற்கு ஏறுநிரல் எனப் பெயர்.
ச ரி க ம ப த நி ச்
அவரோகனம் – சுரங்கள் ஒன்றுக்கொன்று குறையும்போது அவரோகனம் என்று பெயர். தமிழிசையில் இதற்கு இறங்கு நிரல் எனப் பெயர்.
அவரோகனம் – ச் நி த ப ம க ரி ச
இதுவே ஒரு சுரஸ்தானம் (Octave) ஆகும். இப்படி ஏற்ற இறக்கங்களோடு இருக்கும் ஸ்வரக் கோர்வையை ராகம் என்று கூறுவர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்வரக்கோர்வை மாயா மாளவ கௌலே ராகத்தினுடையது.
கருத்துகள்
கருத்துரையிடுக