மாயா மாளவ கௌலே !
கர்நாடக சங்கீதம் கற்கும்போது அடிப்படையாக, முதல் ராகமாக கற்பிக்கப்படும் ராகம். அடிப்படை ராகங்கள் 72. அவற்றுள் 15th ராகமே மாயா மாளவ கௌலே ! இது
அடிப்படை ஏழு ஸ்வரங்களையும் கொண்ட சம்பூர்ண ராகம். பயிற்சிகள் எல்லாமே இந்த ராகத்தில் தான் அமைந்திருக்கும்.. வெவ்வேறு வேகத்தில் இந்த பயிற்சிகளை செய்யும்போது குரல் வளம் வளரும்.. தொண்டை விரிவடையும்.. மெல்ல மெல்ல லாவகம் பிடிபடும்.. ஸ்வரவளி வரிசை, ஜண்டை வரிசை, உச்சஸ்தாயி வரிசை, மந்திரஸ்தாயி வரிசை, தாட்டு வரிசை, சப்த தாள அலங்காரம் வரையில் பயிற்சி செய்யும்போது மாயா மாளவ கௌலே ராகத்தையும் அதன் ஸ்வரஸ்தானங்களையும் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.. இது காலை பொழுதிற்கான ராகம்.. காலையில் இந்த பயிற்சிகளை செய்வது ஒரு வகையில் தியானமும் கூட.
கருத்துகள்
கருத்துரையிடுக