ஸ்வராவளி வரிசைகள் !
கர்நாடக சங்கீதத்தின் முதல் படிநிலை. ஸ்வராவளி அல்லது சரளி வரிசைகள் என்று அழைக்கப்படும். இவை ஏழு ஸ்வரங்களையும் அறிமுகப்படுத்தும் வண்ணம் கட்டமைக்கப்பட்டது. மொத்தம் பதினான்கு வரிசைகள் கொண்டது. ஆதார ஸ்ருதியான ஸ- வில் இருந்து தான் அனைத்து வரிசைகளும் ஆரம்பிக்கும் ( 11 மற்றும் 12 மட்டும் விதிவிலக்கு) இந்த 14 வரிசைகளையும் உங்களுடைய ஸ்ருதியில், அவற்றின் ஸ்வரஸ்தானங்களில் இருந்து வழுவாமல் விலகாமல் பாட வேண்டும்.. முதல் காலத்தில் பாடி நன்றாக பயிற்சி பெற்ற பின்னரே இரண்டாம் காலத்திற்கு முன்னேற வேண்டும். அதன் பிறகு மூன்றாம் காலம், நான்காம் காலம் என்று முன்னேற வேண்டும். அதன் பிறகு மூன்று காலங்களையும் சேர்த்து பயிற்சி செய்ய ஆரம்பிக்க விடும்.. ஸ்ருதியில் கவனத்தில் கொண்டு பொறுமையாக பாடி பழக பழக அடுத்த படிநிலைக்கு செல்ல முடியும்.. நான்காம் காலம் உடனேயே கற்றுக் கொள்ள அவசியம் இல்லை.. அடிப்படை வரிசைகள் முழுவதும் கற்ற பிறகு பொறுமையாக நான்காம் காலம் கற்றுக் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக