முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுழல்!

திரும்பத்திரும்ப  நீல நிறத்தையே  தேர்வு செய்கிற  காலத்தில் இருக்கிறேன்  நான்! எவ்வளவு சொல்லியும்  ஆரஞ்சு நிறத்தை  கண்டுகொள்ளவில்லை  என்ற வருத்தத்தோடே  இருந்தாய் நீ! கைப்பை,பொட்டு, வளையல்  சேலை என ஆரஞ்சு நிறத்தில்  தகதகக்கும் உன்னை  உற்றுப்பார்த்தேன்.. ஒரே நிறத்தைத் பின்தொடர்வது  நான் மட்டும் அல்ல! சுழலில் இருந்து சீக்கிரம்  வெளிவர பிரார்த்தனைகள்  நம்மிருவருக்கும்! 💛💛💛

சாரல் !

வாடிய செடி  ஒருபோதும்  வாய்திறந்து கேட்பதில்லை!  மழைக்காக  மன்றாடுவதில்லை!  எதிர்பாரா சாரலில்  நனைந்து போகிறது  பூரிப்பில்!  மனிதர்களும்  சிலநேரங்களில்  வாடிய செடிகள் தான்! 😌😌😌
நான் எப்போதுமே  இப்படித்தான்  இருந்தேன் !  ஏதேதோ  வர்ணங்கள் பூசி  என்னை மெருகேற்றி  உருவகித்திருந்தாய்  கற்பனையில் !    நான் நிறம் மங்கிவிட்டதாய்  குறை கூற ஆரம்பித்தாய்  உன் கனவில்  பெய்த மழையில்!  எதுவுமே நிகழ்ந்திராதபோது  எப்போது நிகழ்த்தியவனானேன் ?  ஒன்றுமே  புரியவில்லை எனக்கு!  நான் எப்போதுமே  இப்படித்தானே  இருந்தேன்???
எப்போதோ  தீர்ந்து போன ஒன்றை  எப்படிப் பேசித் தீர்ப்பது ?   தீர்ந்து போவதென்பதே  கற்பனை தான்..  தீர்ந்து போவதற்கு  முன்பு கூட  அங்கே எதுவும்  வாய்த்திருக்கவில்லை..  மொழிக்குப் புலப்படா  ஒரு மௌனக்குவியல்  வெற்றிடத்தை வெறுமையாய்   நிரப்ப  மனமின்றி  "இதுவும் கடந்து போகும் "  என்று  வார்த்தைகளை அடுக்கி வைக்கிறது!  உண்மையில் எதுவும்  கடந்து செல்வதில்லை  கடக்கப்படுகிறது!
எப்போதாவது ஒருநாள்  நன்றாக இருக்கிறாயா ?  என்று   கடமைக்காகக் கேட்பேன்!   நீ நலமாயில்லை  என்று மட்டும் கூறிவிடாதே!   அந்த பதிலை  எப்படி எதிர்கொள்வதெனத்   தெரியாது எனக்கு! பதிலுக்காகக்  காத்திருக்கும்  ஒவ்வொரு நொடியும்  பதட்டமாய் இருக்கிறது!  கருணையோடு  என் இயலாமையைக்  கடந்துவிடு   "நல்லாயிருக்கேன்" என்ற பதிலோடு.. உன் வெற்றுப்புன்னகையைப்  பார்க்காதவாறு   கிளம்பிவிடுவேன்  உரையாடலை  சீக்கிரம்  முடித்துக்கொண்டு!  

சிலந்தி!

சிலந்தி எலிவளைக்குள் உழல்வது  அன்றாடமானபின் வறட்டு வாழ்வின்  ஆரம்பப்புள்ளியாகிறது  கண்டும் காணாமல்   விடப்பட்ட  இடைவெளியில்  வலை  பின்னிச்செல்லும்  சிலந்தி!     

தட்டை மனநிலை!

தட்டை மனநிலை தட்டை மனநிலை எல்லாவற்றையும் ஒரு தளத்தில் பார்க்க முனைகிறது..  அந்த மனநிலைதான் அரசு பள்ளியில் ஒரு அறச்சீற்றம் கொண்ட ஆசிரியருக்கு சேர்ந்து குரல் கொடுக்கும் துணிவை  தகர்க்கிறது..  ஏன் இந்த தேவை இல்லாத வேலை? எங்களை போலவே இருக்க வேண்டியது தானே என்று குழப்புகிறது.  சுதந்திரமான சிந்தனைவாதியைப் பார்த்து கடிவாளம் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கிறது!  ஒரு பிரபலதிரைப்படத்தை  ஒரு எழுத்தாளர் வேறொரு கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் போது  சீற்றம் கொள்கிறது.  கேள்விகள் ஏன் கேட்கிறாய்?  பிடிக்கவில்லை என்றால் பேசாதே என்ற மந்தப்படுத்துகிறது..  ஒற்றை கோணத்தில் அணுகுதல் மாற்றத்திற்கு  எப்படி வழிவகுக்கும்?  மரபையும் புனிதப்படுத்துதலையும்  ஒரு மாற்று சிந்தனையாளரை,  கட்டுக்குள் வைக்க ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறோம்!  பொதுப்புத்தியில் இருந்து விலகிச்செல்லும் ஒரு கேள்வியை அகங்காரத்தின்  நீட்சியாக பார்க்கிறோம்..  மந்தையில் இருந்து விலகிச் செல்லும் ஆடு என்று பதற்றம் கொள்கிறோம்..  ஆனால் உண்மையில் கேள்விகள்தான்  அடுத்த மனிதனின்  சிந்தனையை தூண்டுகிறது..  இப்படி ஒரு கோணம் இருக்கிறது  என்பதை  கவனிக்க
பூங்கொத்து  கொடுத்து  வாழ்த்திக்கொண்டிருந்தார்கள்  எல்லாரும்!  மௌனமாய்  கவனித்து கொண்டே  இருந்த அவள்  இன்று என்ன சமைத்தாய்  என்றாள்  "எப்பவும் போல  சாம்பார் தான்" கேள்விக்கான பதிலை  தயாராய்  வைத்திருக்கும்  அளவுக்குத்  தேறிவிட்டேன் நான் !  இந்த விளையாட்டு  சகஜமாகிவிட்டது  எங்களுக்குள் சிரிப்புடன்  நகர்வது  ஸ்வாரஸ்யமாகிவிட்டது  எனக்கும் 😬
அதே பாதையில்  தான் சென்றுகொண்டே  இருக்கிறார்கள்  அதே முகங்களைத்தான்  அனுதினமும்  பார்க்கிறார்கள்  சாயல்களையே தேடித்திரியும்   மனது  சிறு சிரிப்புடன்  நிறுத்திக்கொள்கிறது  நட்பு பாராட்டாமல்  நலிந்து சுருங்குகிறது  பயணிகள்  பேசிக்கொள்ளக்கூடாதென யார் இங்கே  சட்டம் இயற்றியது ?
பெருமிதப்பாய்  தனித்தனித்தீவுகளை  உருவாக்கியபின் பாலங்கள்  கட்டத்தெரியாமல்  திணறிக்கொண்டிருக்கிறேன்..   ஆழிப்பேரலை ஒன்று  கடந்து செல்கிறது காலுக்கடியில் சலனமே இல்லாமல்!!! 

Gaslighting!

எதிர்பாரா   நொடியொன்றில்   கூர்முனையால்  கிழித்துவிட்டு  " பார்த்து இருக்க  மாட்டாயா"  என்றேன்  கருணை பொழியும்  கண்களோடு!  காயங்களுக்கு  கட்டுப்போட்டபடி!    இப்போது  நீ  நன்றி சொல்ல  கடமைப்பட்டிருக்கிறாய்!   கொஞ்ச நேரம் காத்திரு!  கூர்தீட்டிவிட்டு  வருகிறேன்..  இந்த விளையாட்டு  எனக்குப்பிடித்திருக்கிறது!   😈    #gaslightingawareness #radiancefromreks
  காலையில் என்ன சமைக்கலாம்  இட்லி மாவு இருந்திருந்தால் சுலபமாய் இருந்திருக்கும்! 🥲 இன்றைக்காவது நடைபயிற்சி போக வேண்டும்  ஒரு நாய்க்குட்டி வளர்த்தால் என்ன?  நன்றாக தான் இருக்கும்  வீட்டை யார் சுத்தம் செய்வது? பேசாமல் காலையிலே நூடுல்ஸ் செய்வோமா?  யார் வந்து கேட்க போகிறார்கள்?  ஆமாம்.. சீனர்கள் என்ன  காலை உணவு எடுப்பார்கள்..  இந்தியன் இரண்டாம்  பாகம் பார்த்தால் என்ன ?  அதான் நல்லா இல்லையாமே?  முதல் பாகத்தில்  "அக்கடா" பாட்டு நல்லா இருக்குமே... இணையத்தில் போய் பாப்போம்..  நல்ல தரமான ஒலி/ஒளித்தரத்தில் கிடைக்குமா?  சனிக்கிழமை காலை எவ்ளோ ரம்யமா இருக்கு..  தினமும்  சீக்கிரம் எழுந்திருக்கணும் ! பரவாயில்லையே ! இவ்ளோ நேரம் அலைபேசி பாக்காம இருக்கோம்!  சீக்கிரம் அலைபேசிக்கு உறை மாற்றணும் !  இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு?  புட்டு செஞ்சு  வாழைப்பழத்தை  காலி பண்ணிடுவோம் நான் ஒரு ஐடியா மணி !  ஹி.. ஹி.. ஹி... "கண்களை மெதுவாக திறந்திடுங்கள் !"  ஹ...ப்பா...டா  ஒரு வழியா முடிஞ்சிடுச்சு!  தெளிவாய் இருப்பதாய்க்  காட்டி கொண்டேன் !  புன்னகையுடன் விடை பெற்றுக்கொண்டேன் 🙂  முதல் க

Kalinga Nardhana - காளிங்க நர்த்தனம்!

    I was probably five or six years old when I first saw the painting of "Kalinga Nardhana" ( காளிங்க   நர்த்தனம் ).I can still clearly recall how  appealing the painting was. T he artwork was done by the sister of my maternal grandfather. I've heard that she loved creating art and paintings, and that she would spend a lot of time exploring its various facets. Unfortunately, she regrettably passed away at a very young age. My grandfather was a kind brother who carefully secured many of her works. In her portrayal of "Kalinga Nardhana",  snake Kalinga was not in agony or in pain when Krishna was dancing on top of his head. He was having a blissful time with Krishna who dances with rhythm. That's how I envisioned the portrait, at least. My mother later exposed me to Krishna's stories, it was hard to believe that snake Kalinga could be evil. It completely contradicted the imagination of what I had in mind. After that, I interpret the story in my own
இட்டு நிரப்ப முடியாத  கருந்துளைக்குள் கவிதைகள்  கொட்டிக்கொண்டிருக்கிறேன்  நான் ! அழகாய் எழுதுகிறாய்  என்கிறார்கள்  உந்துவிசை  எதுவென  விசாரிக்கிறார்கள்  இயக்கமாய்  இங்கே  தோன்றுவதோ  இயக்குதலின் ஒரு கோணம்! இயக்குவிசையின்  ஒரு பரிமாணம்! வார்த்தைகள் கோர்த்து  பள்ளம் சரிசெய்ய  பணிக்கப்பட்டிருக்கிறது  அன்றாடம்! எது எப்படியோ.. பிரசவம் முடிந்த அன்னையாய்  தூங்கும் நேரங்கள் மட்டும்  ஆசீர்வாதம் 😌
உன்னால்  வாசிக்கவே  முடியாத  ஒற்றைக் கவிதை  என்னிடம் உண்டு ! காலந்தோறும்  அதன் வாசிப்பனுவம்  தேடி  என்னைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்  நீ!   ஒவ்வொரு  யுகத்தின்  முடிவில் என் ஒற்றைக்கவிதையின்  நீளம் கூட்டிடுவேன் நான்!  சுழன்று கொண்டே  இருக்க பிறந்தவர்கள் நாமும் பிரபஞ்சமும் 😌
காலமும் வேகமும்  கணக்கிடத்   தேவையின்றி   பறக்கத்   தெரியுமெனக்கு!  ஆனாலும்  சிறகுகளை கவனமாய்க் குறுக்கிக்கொண்டு  தத்தித் தத்தி நடக்கும்  எனக்கு  ஓட்டமும்  பழக்கிக்கொண்டிருக்கிறேன்  சிறகு விரிக்கத்  தயாராகும்  ஒரு திருநாளில்..  என் கால்களும் உடனிருக்கும்  உறுதியாய் ! இளைப்பாற  இறங்கும்போது  நிலத்தைப்    பற்றிக்கொள்ளும்  உரிமையாய் !  அதுவரையில்  இப்பெருவானம்  எனக்காய் காத்திருக்கக்கடவது😌    

நவீன சீதை!

பத்தினி  என்று நிரூபிக்கத் தேவை இல்லை  நவீன சீதைக்கு !  ராஜ்யத்தில்  பாதி ஜீவனாம்சம்  பெற்றுக்கொள்வாள்  சிங்கபெண்ணே  என்று  கொண்டாடப்படுவாள்! இன்ஸ்டாவில்  பல மில்லியன்  ஆதரவாளர்கள்  ஒன்று சேர்ந்திருப்பார்கள்..  யாரோ ஒரு கவிஞர்  சீதாயணம்  கூட எழுதக்கூடும்... முத்தாய்ப்பாய்  முதல் பிரதியை  ராமரே வந்து  பெற்றுக்கொள்ளுவார் ! 😌  
சும்மா தான் பேசினேன் ... திரும்ப திரும்ப  சொல்லிக் கொண்டே  இருந்தேன்.. வேலை பற்றி  அக்கறையாய்  விசாரித்தேன்  மதியம் என்ன சாப்பாடு ? ஆர்வமாய்க் கேட்டேன்  அரசியல் கூட பேச  முயற்சித்தேன்!  நான் பார்க்கவே  பார்க்காத உலகக்கோப்பை  கிரிக்கெட்  விளையாட்டு பற்றி  மும்முரமாய்   கருத்து சொல்ல வந்தேன்!  உன்னிடம்  பேசுவதற்கு.. பேச வைப்பதற்கு  எத்தனை  ஜாலங்கள் தேவைப்படுகிறது  எனக்கு?  ஆனாலும்  கடைசிவரை  சொல்லவில்லை!   ஞாபகப்புதையல்களில் சிறகடித்துக்கிடக்கும் ஒரு சிறு சிட்டுக்குருவி  இன்று  நிம்மதியாய் உறங்கும்  என்று !      

ஆச்சி!

  மைசூர் சாண்டல் சோப்பும்  ஜவ்வாது  வாசனையுமாய்  வளைய வரும்  ஆச்சியின் அருகாமை  அடிக்கடித்  தேவைப்படுகிறது ...  இப்போதெல்லாம்! நினைவுகள்  மட்டும்  வைத்துக்கொண்டு  அவளைத்தேடும்  மனதை  எப்படி  ஏமாற்றி வைப்பது ?  அவள்  மிஞ்சி நிற்கிற  நியாபக இடுக்குகளில்  ஏதோ ஒரு விதத்தில்  ஏக்கப்படுத்தும்  வெற்றிடத்தை எப்படி நிரப்புவது ? சொற்களால்  செயல்களால்  பார்வையால் சுகந்தத்தால் ஆட்கொண்டு விடுகிறார்கள்  மனிதர்கள்!  முதல் மூன்றும்   முடியாது இப்போது!   நான்காவது  தேறுவதற்கு  வாய்ப்பிருக்கிறது !  சரி !  வாசனைகளால்  கொஞ்ச நேரம்  சுவீகரித்துக் கொள்ளலாமா அவளை?  ஆன்லைன்  ஆர்டரின் வழியே  வந்து விட்டாள் என் ஆச்சி  ..  சோப்பும் ஜவ்வாதுமாய்... அவளின் வாசனையால் நிரம்பிய   என் கைகோர்த்து .. சேர்ந்தமர்ந்து  புன்னகைப்பாள்  முகம் பார்த்து .. பள்ளி முடிந்து  ஓடி வரும்   என் குழந்தையை அவள் அம்மாவும் அவள் ஆச்சியின் அம்மாவும்  அணைத்துக்கொள்வார்கள்   இன்று! 

Tribute to Father "Maharaja" -16/06/2024

இந்த இரவு  நீளமானது..  வெறுமையின்  உச்சத்தில்  இருக்கிறது... கால்களை  பலமிழக்கச் செய்கிறது... எதற்கு வாழ்கிறாய்  என்று கூட கேட்கிறது ... ஆனாலும்  என் மகளின்  வலுமிக்கக் கரங்களைப்  பற்றிக்கொண்டே  மெல்லக்கடந்து விடுவேன்  நானும்!  #Maharaja
குறிப்பிட்டுச்சொல்ல எதுவும் இல்லை..  குறிப்புகள் எதுவும்  தயாரிக்கவில்லை..  ஆறுதலோ அரவணைப்போ  தற்சமயம் தேவை இல்லை..  சலனமற்ற மனவெளியில்  நினைவலைகளின் மடிப்புகளில் விதைக்கப்பட்ட நீ  என்றோ ஒருநாள்  முகிழ்த்தெழும்போது  எப்படி இருக்கிறாய்?  என்ற கேள்வியோடு  நீ அருகில்  வந்தால் போதும் ! 
அவளுக்கும் எனக்கும் தான் எத்தனை இடைவெளிகள் !!!  ஒருமுறை  நானும் அவளும்  ஒரே மாதிரி புடவையில் கல்லூரி நிகழ்வொன்றில்!  என்னைக் கவர்ந்திருந்த  நகையை  எனக்கு முன்பே  வாங்கி இருந்தாள்...  எனக்கு பிடித்த ஆசிரியர் அவளிடம் சிரித்துப்    பேசியதுபோல்  தோன்றியது ஒருநாள் ...  நான்  நன்கு எழுதிய தேர்வில் அவள் முதல் மதிப்பெண்  வாங்கி இருந்தாள்.. அவள் அம்மாவிற்கு என்னைப் பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று ! அவள் தேடியலைந்த  புத்தகத்தின்  முதல் பிரதி  என்னிடமிருந்தது! என் கையெழுத்து  அழகாய் இருந்தது... அவள் தோழி  என் நீள்முடியை  ரசித்து,  தொட்டுப்பார்த்துவிட்டாள்!  இப்படி  உப்புச்சப்பில்லாத காரணங்கள்   குறுக்கிடாமல்  இருந்திருந்தால் இன்று நாங்கள் உற்றதோழிகள் 😂