எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களை சிறுகதைகள் மற்றும் அவரின் இணையதள கட்டுரைகள் வாயிலாக வாசித்துப்பழகிய எனக்கு, அவர் இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலைப் படிப்பது முற்றிலும் புதிய அனுபவம். இந்த நாவலின் முதல் பதிப்பு வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுமி :) விஷ்ணுபுரம் நாவல் 1288 பக்கங்கள் கொண்ட நாவல். இதை எழுதி முடிக்க கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகியிருக்கிறது. தொடர்உழைப்பும் படைப்பூக்கமும் விஷ்ணுபுரம் என்னும் பிரம்மாண்டமான கற்பனை நகரத்தை பெரும்நாவலாகக் நம் கண்முன்னே கட்டெழுப்பி இருக்கிறது. ஆம்..விஷ்ணுபுரம் ஒரு புனைவு உலகம், சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சில நிகழ்வுகளின் தொகுப்பு! பிரம்மாண்டமான பள்ளிகொண்ட பெருமாள் கோவிலை மையமாகக்கொண்ட இந்த நாவல், கோவில் உருவான கதைகளைச் சுற்றியும், அங்குள்ள சிலைகளைப் பற்றியும், அந்த ஊரைப் பற்றியும் அதன் மனிதர்களைப் பற்றியும் நமக்கு விவரிக்கிறது. ஸ்ரீ பாதம், கௌஸ்தூபம், மணிமுடி என்னும் 3 பகுதிகளைக்கொண்டது. ஆன்மீக நாவல் போல ஆரம்பிக்கும் கதை மெல்ல மெல்ல உளவியல் தேடல், நடைமுறை சிக்கல்கள், தொன்மம்...
அருமை
பதிலளிநீக்குஅருமை ரேகா
பதிலளிநீக்கு