எத்தனை இடைவெளிகள் !!!
ஒருமுறை
நானும் அவளும்
ஒரே மாதிரி புடவையில்
கல்லூரி நிகழ்வொன்றில்!
என்னைக் கவர்ந்திருந்த
நகையை
எனக்கு முன்பே
வாங்கி இருந்தாள்...
எனக்கு பிடித்த ஆசிரியர்
அவளிடம் சிரித்துப்
பேசியதுபோல்
தோன்றியது
ஒருநாள் ...
நான்
நன்கு எழுதிய தேர்வில்
அவள் முதல் மதிப்பெண்
வாங்கி இருந்தாள்..
அவள் அம்மாவிற்கு
என்னைப் பார்த்தவுடன்
பிடித்துப் போயிற்று !
அவள் தேடியலைந்த
புத்தகத்தின்
முதல் பிரதி
என்னிடமிருந்தது!
என் கையெழுத்து
அழகாய் இருந்தது...
அவள் தோழி
என் நீள்முடியை
ரசித்து,
தொட்டுப்பார்த்துவிட்டாள்!
இப்படி
உப்புச்சப்பில்லாத
காரணங்கள்
குறுக்கிடாமல்
இருந்திருந்தால்
இன்று நாங்கள்
உற்றதோழிகள் 😂
கருத்துகள்
கருத்துரையிடுக