சும்மா தான்
பேசினேன் ...
திரும்ப திரும்ப
சொல்லிக் கொண்டே
இருந்தேன்..
வேலை பற்றி
அக்கறையாய்
விசாரித்தேன்
மதியம் என்ன சாப்பாடு ?
ஆர்வமாய்க் கேட்டேன்
அரசியல் கூட பேச
முயற்சித்தேன்!
நான் பார்க்கவே
பார்க்காத
உலகக்கோப்பை
கிரிக்கெட்
விளையாட்டு பற்றி
மும்முரமாய்
கருத்து
சொல்ல வந்தேன்!
உன்னிடம்
பேசுவதற்கு..
பேச வைப்பதற்கு
எத்தனை
ஜாலங்கள்
தேவைப்படுகிறது
எனக்கு?
ஆனாலும்
கடைசிவரை
சொல்லவில்லை!
ஞாபகப்புதையல்களில்
சிறகடித்துக்கிடக்கும்
ஒரு சிறு சிட்டுக்குருவி
இன்று
நிம்மதியாய் உறங்கும்
என்று !
கருத்துகள்
கருத்துரையிடுக