நிகழ்ந்திராத் தருணங்கள்!
நான் எப்போதுமே
இப்படித்தான்
இருந்தேன் !
ஏதேதோ
வர்ணங்கள் பூசி
என்னை மெருகேற்றி
உருவகித்திருந்தாய்
கற்பனையில் !
நான் நிறம் மங்கிவிட்டதாய்
குறை கூற ஆரம்பித்தாய்
உன் கனவில்
பெய்த மழையில்!
எதுவுமே நிகழ்ந்திராதபோது
எப்போது நிகழ்த்தியவனானேன் ?
ஒன்றுமே
புரியவில்லை எனக்கு!
நான் எப்போதுமே
இப்படித்தானே
இருந்தேன்???
கருத்துகள்
கருத்துரையிடுக