காலையில் என்ன சமைக்கலாம்
இட்லி மாவு இருந்திருந்தால் சுலபமாய் இருந்திருக்கும்! 🥲
இன்றைக்காவது நடைபயிற்சி
போக வேண்டும்
ஒரு நாய்க்குட்டி வளர்த்தால் என்ன?
நன்றாக தான் இருக்கும்
வீட்டை யார் சுத்தம் செய்வது?
பேசாமல் காலையிலே
நூடுல்ஸ் செய்வோமா?
யார் வந்து கேட்க போகிறார்கள்?
ஆமாம்..
சீனர்கள் என்ன
காலை உணவு எடுப்பார்கள்..
இந்தியன் இரண்டாம்
பாகம் பார்த்தால் என்ன ?
அதான் நல்லா இல்லையாமே?
முதல் பாகத்தில்
"அக்கடா" பாட்டு நல்லா இருக்குமே... இணையத்தில் போய் பாப்போம்..
நல்ல தரமான
ஒலி/ஒளித்தரத்தில்
கிடைக்குமா?
சனிக்கிழமை காலை
எவ்ளோ ரம்யமா இருக்கு..
தினமும்
சீக்கிரம் எழுந்திருக்கணும் !
பரவாயில்லையே !
இவ்ளோ நேரம் அலைபேசி பாக்காம இருக்கோம்!
சீக்கிரம் அலைபேசிக்கு உறை மாற்றணும் !
இன்னும் எவ்ளோ
நேரம் இருக்கு?
புட்டு செஞ்சு
வாழைப்பழத்தை
காலி பண்ணிடுவோம்
நான் ஒரு ஐடியா மணி !
ஹி.. ஹி.. ஹி...
"கண்களை மெதுவாக திறந்திடுங்கள் !"
ஹ...ப்பா...டா
ஒரு வழியா முடிஞ்சிடுச்சு!
தெளிவாய் இருப்பதாய்க்
காட்டி கொண்டேன் !
புன்னகையுடன்
விடை பெற்றுக்கொண்டேன் 🙂
முதல் காரியமாக
ஒரு புத்தர் சிலை
வாங்க வேண்டும் !
தீர்க்கமாய்
முடிவெடுத்தபடி
100 நாள்
" தியான வகுப்பை"
முடித்துக்கொண்டேன்!
ஒரு வழியாக
"ஓம் சாந்தி"
என்று
தியானமும்
தன்னைத் தானே
முடித்துக்கொண்டது!
கருத்துகள்
கருத்துரையிடுக