எப்போதோ 
தீர்ந்து போன ஒன்றை 
எப்படிப் பேசித் தீர்ப்பது ?  
தீர்ந்து போவதென்பதே 
கற்பனை தான்.. 
தீர்ந்து போவதற்கு 
முன்பு கூட 
அங்கே எதுவும் 
வாய்த்திருக்கவில்லை.. 
மொழிக்குப் புலப்படா 
ஒரு மௌனக்குவியல் 
வெற்றிடத்தை
வெறுமையாய்  
நிரப்ப 
மனமின்றி 
"இதுவும் கடந்து போகும் " 
என்று 
வார்த்தைகளை
அடுக்கி வைக்கிறது! 
உண்மையில்
எதுவும் 
கடந்து செல்வதில்லை 
கடக்கப்படுகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் - 1