காலமும் வேகமும் 
கணக்கிடத்  
தேவையின்றி  
பறக்கத்  
தெரியுமெனக்கு! 

ஆனாலும் 
சிறகுகளை
கவனமாய்க்
குறுக்கிக்கொண்டு 
தத்தித் தத்தி
நடக்கும்  எனக்கு 
ஓட்டமும் 
பழக்கிக்கொண்டிருக்கிறேன் 

சிறகு விரிக்கத் 
தயாராகும் 
ஒரு திருநாளில்.. 
என் கால்களும்
உடனிருக்கும் 
உறுதியாய் !
இளைப்பாற 
இறங்கும்போது 
நிலத்தைப்   
பற்றிக்கொள்ளும் 
உரிமையாய் ! 

அதுவரையில் 
இப்பெருவானம் 
எனக்காய்
காத்திருக்கக்கடவது😌








 







 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் - 1