சுழல்!
திரும்பத்திரும்ப
நீல நிறத்தையே
தேர்வு செய்கிற
காலத்தில் இருக்கிறேன்
நான்!
எவ்வளவு சொல்லியும்
ஆரஞ்சு நிறத்தை
கண்டுகொள்ளவில்லை
என்ற வருத்தத்தோடே
இருந்தாய் நீ!
கைப்பை,பொட்டு, வளையல்
சேலை என ஆரஞ்சு நிறத்தில்
தகதகக்கும் உன்னை
உற்றுப்பார்த்தேன்..
ஒரே நிறத்தைத் பின்தொடர்வது
நான் மட்டும் அல்ல!
சுழலில் இருந்து சீக்கிரம்
வெளிவர பிரார்த்தனைகள்
நம்மிருவருக்கும்!
💛💛💛
கருத்துகள்
கருத்துரையிடுக