முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Raga Hamsadhwani 🤍

Structure :  It is the derivative of Dheera Shankarabharanam Raga Hamsadhwani - Chirp of a Swan.. Annaparavayin Azhaipu 😍 Arohana: S R G P N Ṡ Avarohana: Ṡ N P G R S ஆரோகணம்: ஸ ரி2 க3 ப நி3 ஸ் அவரோகணம்: ஸ் நி3 ப க3 ரி2 ஸ இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. - Pentatonic scale ( Audava- Audava Ragam )  This Raga was invented/ created by  Ramaswamy Dheekshidhar. It was popularized by his son Muthuswami Dheekshidhar. It is one of the healing Ragas 💛 Raga Hamsadhwani brings love and Joy Release stress and tension from the body ♥️  Small Bhajans :  1. Sharanu Gajamukha 2. Parvathy nandhana 3. Chithamani  Carnatic Songs :  1.Vaathabi Ganapathim - Muthuswami Dheekshidhar 2.Murugaatru padai ketta velava 3. Moolaadhaara moorthi  4. Parvathi pathim - Hamsadhwani ( Muthusamy Dheekshidhar)  Raga based Film Songs :  1. En manadhai kollai adithavale 2. Vachindamma 3. Mayile Mayile 4. Vellai Pooka

அன்னையை வேண்டுதல் !

https://youtu.be/hMadk55skRk எண்ணிய முடிதல் வேண்டும்,  நல்லவே யெண்ணல்  வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவமெல்லாம்  பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்மு னிங்கு  நசித்திட வேண்டும்  அன்னாய்! 

Basics of Canatic Music - The 16 Swara Concept !

  Basics of Carnatic Music :   1. SWARA : Swara is the musical note. Technically speaking, the raga or melody of Indian music is constituted with these minute elements. Swaras are seven in number and are collectively known as Saptaswara They are as follows: 1. Shadjam Sa 2. Rishabham Ri 3. Gandharam Ga 4. Madhaymam Ma 5. Panchamam Pa 6. Dhaivatam Dha 7. Nishadam Ni Each of these swaras is sung in different frequencies in the ascending order. These frequencies or places in which the swara sung are called ‘ SWARASTHANA ’ These 7 basic swaras can be further divided into 12 swaras based on their slight variations in their frequencies. These are collectively known as ‘ DWADASA SWARASTHANAS’ , as follows:- The 12 swaras and their names are as follows: 1.Shadja (s) 2.Suddha Rishabha (r1) 3.Chatussruti Rishabha (r2) 4.Sadharana Gandhara (g1) 5.Antara Gandhara (g2) 6.Suddha Madhyama (m1) 7.Prati Madhyma (m2) 8.Panchama (p) 9.Suddha Daivata (dha1)

யாழிசைக்கருவி சில குறிப்புகள்

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ? இந்த பாடல் என் பெற்றோர்க்கு மிகவும் பிடித்த பாடல்.. கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் வரும் இந்த அழகிய பாடலின் தொடக்கத்தில் யாழ் மீட்டுவது போன்ற காட்சி இடம்பெறும். https://youtu.be/pAJiM3EIq9w வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.  யாழ் நூல் பழந்தமிழரின் இசை நுட்பங்கள், யாழ் ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் சுவாமி விபுலானந்தர் ஆவார். விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ் நூல் ஆகும் பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது. யாழில் உள்ள ஒவ்வொரு நரம்பு

கர்நாடக இசை குறிப்புகள்

ஸ்வராவளி வரிசைகள் ஏழு ஸ்வரங்கள் இருப்பது நமக்குத் தெரிந்ததே. அவற்றின் முழு பெயர்கள்: ஸ – ஷட்ஜம் ரி – ரிஷபம் க – காந்தாரம் ம – மத்யமம் ப – பஞ்சமம் த – தைவதம் நி – நிஷாதம் இவை கர்நாடக இசைக் கூறுகளில் முக்கியமாக வகிக்கின்றது. இந்த ஒவ்வொறு ஸ்வரமும் ஒரு ஒலியமைப்பே ஆகும். இவற்றிற்கு தனி அலைவரிசை உண்டு. இதே போல் தமிழிசையிலும் இதற்கான சமமான ஒலி அலைவரிசைகளை பகுத்துள்ளனர். அவை: ஸ – குரல் ரி – துத்தம் க – கைக்கிளை ம – உழை ப – இளி த – விளரி நி – தாரம் இதைச் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில்: குரறுத்த நான்கு கிளைமூன் றிரண்டாங் குரையா வுழையிளி நான்கு-விரையா விளரியேனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர் இந்த ஏழு ஸ்வரங்களில் ஸ, ப ஆகிய இரண்டும் நிலை ஸ்வரங்கள் எனக் கூறப்படும். அதாவது இவை மாறுதல் இல்லாத ஸ்வரங்கள். அப்படியென்றால் என்ன? ஸ மற்றும் ப சுரங்கள் முழுமையான சுரங்கள்.   அலைவரிசை அல்லது அசைவு எண்கள் (Frequency Hz) கீழே கொடுக்கப்பட்டுள்ளன: ச    ரி    க   ம    ப    த   நி   ச் 240 256 300 320 360 384 450 480 ஆரோகனம் – சுரங்கள் மற்றொன்றைவிட அதிகரித்துச் செல்லும்போது ஆரோகன

கொஞ்சம் கர்நாடக இசை - ஸ்வராவளி வரிசைகள் !

ஸ்வராவளி வரிசைகள் !  கர்நாடக சங்கீதத்தின் முதல் படிநிலை. ஸ்வராவளி அல்லது சரளி வரிசைகள் என்று அழைக்கப்படும். இவை ஏழு ஸ்வரங்களையும் அறிமுகப்படுத்தும் வண்ணம் கட்டமைக்கப்பட்டது. மொத்தம் பதினான்கு வரிசைகள் கொண்டது. ஆதார ஸ்ருதியான ஸ- வில் இருந்து தான் அனைத்து வரிசைகளும் ஆரம்பிக்கும் ( 11 மற்றும் 12 மட்டும் விதிவிலக்கு) இந்த 14 வரிசைகளையும் உங்களுடைய ஸ்ருதியில், அவற்றின் ஸ்வரஸ்தானங்களில் இருந்து வழுவாமல் விலகாமல் பாட வேண்டும்.. முதல் காலத்தில் பாடி நன்றாக பயிற்சி பெற்ற பின்னரே இரண்டாம் காலத்திற்கு முன்னேற வேண்டும். அதன் பிறகு மூன்றாம் காலம், நான்காம் காலம் என்று முன்னேற வேண்டும். அதன் பிறகு மூன்று காலங்களையும் சேர்த்து பயிற்சி செய்ய ஆரம்பிக்க விடும்.. ஸ்ருதியில் கவனத்தில் கொண்டு பொறுமையாக பாடி பழக பழக அடுத்த படிநிலைக்கு செல்ல முடியும்.. நான்காம் காலம் உடனேயே கற்றுக் கொள்ள அவசியம் இல்லை.. அடிப்படை வரிசைகள் முழுவதும் கற்ற பிறகு பொறுமையாக நான்காம் காலம் கற்றுக் கொள்ளலாம்.  

கொஞ்சம் கர்நாடக இசை - மாயா மாயவ கௌலே !

மாயா மாளவ  கௌலே ! கர்நாடக சங்கீதம் கற்கும்போது அடிப்படையாக, முதல் ராகமாக கற்பிக்கப்படும் ராகம். அடிப்படை ராகங்கள் 72. அவற்றுள் 15th ராகமே மாயா மாளவ கௌலே ! இது  அடிப்படை ஏழு ஸ்வரங்களையும் கொண்ட சம்பூர்ண ராகம். பயிற்சிகள் எல்லாமே இந்த ராகத்தில் தான் அமைந்திருக்கும்.. வெவ்வேறு வேகத்தில் இந்த பயிற்சிகளை செய்யும்போது குரல் வளம் வளரும்.. தொண்டை விரிவடையும்.. மெல்ல மெல்ல லாவகம் பிடிபடும்.. ஸ்வரவளி வரிசை, ஜண்டை வரிசை, உச்சஸ்தாயி வரிசை, மந்திரஸ்தாயி வரிசை, தாட்டு வரிசை, சப்த தாள அலங்காரம் வரையில் பயிற்சி செய்யும்போது மாயா மாளவ  கௌலே ராகத்தையும் அதன் ஸ்வரஸ்தானங்களையும் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.. இது காலை பொழுதிற்கான ராகம்.. காலையில் இந்த பயிற்சிகளை செய்வது ஒரு வகையில் தியானமும் கூட. 

Khalil Gibran ! ❤️

Khalil Gibran ! ❤️

Fav lines from "The Prophet - Khalil Ghibran"

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல !  அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள் அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை! அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல! ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம் அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது; அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது! நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்; ஆனால், அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள் வாழ்க்கை பின்னோக்கி பயணிப்பதில்லை கடந்தகாலத்தில் சுணங்கி கிடப்பதுமில்லை உங்கள் குழந்தைகள் எனும் உயிருள்ள அம்புகளை ஏவும் விற்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!  வில்லாளி முடிவுகளற்ற பாதையில் குறிவைத்து முழுவலிமையோடு வில்லான உங்களை வளைக்கிறான் அவன் அம்புகள் அதிவேகமாய், அளவற்ற தொலைவுகள் பயணிக்கலாம் விற்பெருவீரனின் கர வளைப்பினில் உங்கள் ஆனந்தம் ஆர்ப்பரிக்கட்டும் பாய்கிற அம்பை விரும்புகிற அவன் பதறாத வில்லையும் விரும

கொஞ்சம் கர்நாடக இசை !

கர்நாடக சங்கீதத்தில் ஸ்ருதியோடு பாடுவது என்பது தான் மிகவும் முக்கியமான படிப்பு, புரிதல், அறிதல் எல்லாமே.. ஆனால் அதை பயிற்றுவிப்பது தான் கடினமான வேலை.. இசை கற்பவர் self exploration செய்து கற்க வேண்டிய உத்தி.. ஓரளவு ஏழு ஸ்வரஸ்தானங்கள் பற்றிய புரிதல் வரும்போது சற்றே ஸ்ருதி பற்றிய ஞானம் பிறக்கும் .. இசை கற்கும் ஒருவர் ஒரே ஸ்ருதியில் நுழைந்து, இழைந்து திரும்ப திரும்ப ஏழு ஸ்வரங்களைப் பாடும்போது  மெல்ல மெல்ல ஸ்ருதி பற்றிய புரிதல் வரும்.. ஆனால் அதற்கு அன்றாட பயிற்சி அவசியமாகிறது.. Voice Warm up செய்வதற்கே சில நிமிடங்கள் பிடிக்கும்.. அதன் பிறகு தான் பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.. மெல்ல மெல்ல ஸ்ருதி பற்றிய புரிதல் வரும்போது 12 ஸ்வரஸ்தானங்கள் பற்றி கற்க ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக ஒவ்வொரு ஸ்வரமும் Different Personality கொண்ட வெவ்வேறு மனிதர்கள்.. அவர்களுடன் போதுமான அளவு நேரம் செலவு செய்தால் மட்டுமே அவர்களை புரிந்துகொள்ள முடியும்.. மேலோட்டமான அடிப்படை அறிவு பாடுவதற்கான தளத்தை விருத்தி செய்ய உதவாது.. ஆகவே மெல்ல நகரும் ஓடத்தின் மீது ஏறி அமர்ந்து "அடிப்படைப் பாடம்" என்ற நதியில

திறவுகோல் குறிப்புகள்!

முயற்சியும், பயிற்சியும் இல்லாத ஒன்று கையில் கிடைப்பதில்லை ! கிடைத்தாலும் நிலைப்பதில்லை! எல்லாம் சரிதான் ! எதற்காக முயற்சிப்பது  என்ற தெற்றனவு கொள்வது எவ்வாறு ?  

திறவுகோல் குறிப்புகள் !

அரைகுறை நீச்சல் அறிவோடு ஒரு கையால் வாழ்க்கை என்னும் ஓடத்தை பற்றிக் கொண்டே உன் குழந்தைக்கு நீந்தக் கற்றுக்கொடுப்பது போன்றது parenting என்னும் art. You can never be Master in it because you are not trained for it. Everyday is a new day and before you get a hold of it,  another Child will come into your space and call you as a grand parent :) 

திறவுகோல் குறிப்புகள் !

வாழ்க்கை என்றால் என்ன என்ற தேடுதலில் தவிக்கும் ஒருவனின் கண்களில் அருகில் வந்தமர்ந்த சின்னஞ்சிறு பறவை தட்டுப்பட வில்லை ! அருந்துகின்ற தேனீர் அவன் சுவைநரம்புகளை தீண்டவில்லை, அவன் வரைந்து முடிக்காத ஓவியம் அவனை அழைக்க வில்லை.. காலம் கனியும் வரை அவன் தேடிக்கொண்டே இருக்கட்டும்.. 

திறவுகோல் குறிப்புகள்

கவலை தான் வளர்ந்த பாதையை, சூழலை, தன் பயணத்தை, திரும்பி பார்த்தபோது தான், தான் ஒரு பயனற்ற சுழலலை  என்று உணர்ந்து, முதன் முதலாக தன்னை தானே பார்த்து புன்னகைத்தது...  

திறவுகோல் குறிப்புகள்

நான் இதுவரை சுவைத்திடாத அந்த உணவின் மணமும் சுவையும் என்றென்றும் என்னால் உணர கூடியதாய் இருக்கிறது  என்றோ எங்கேயோ எப்போதோ எப்படியோ நான் சுவைக்க காத்திருக்கும் அப்பண்டம் இதோ இன்று இதோ என் கையில்தான் இருக்கிறது..