உலக மலைகள் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பதினோராம் தேதி ( December 11) கொண்டாடப்படுகிறது. நம் தமிழ் சமூகம் மலைகளைப் பற்றி பாடல் இயற்றிக் கொண்டாடி இருக்கிறது.. திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய "குற்றாலக்குறவஞ்சி", சிறப்பு மிக்க குற்றால மலையைப் பற்றியது.. அதில் ஒரு அழகான காட்சி! ஆண்குரங்குகள் குற்றால மலையில் விளைந்து நிற்கின்ற, சுவை மிகுந்த, பழங்களைப் பறித்து, பெண் குரங்குகளுக்குத் தந்து கொஞ்சி மகிழ்கின்றன. பெண் குரங்குகள் அந்த அன்பில் மயங்கி, சில பழங்களை கீழே சிந்துகின்றன. இந்த ஆனந்த காட்சியை கண்டு பெருமூச்சோடு எங்களுக்கு கீழே விழுந்த பழங்களையாவதுத் தாருங்கள் என்று வானுலக மக்கள் கெஞ்சுகின்றனர். குற்றாலமக்களோ, கீழே இறங்கி எங்கள் எழில் கொஞ்சும் மலைக்கு வாருங்கள்! என்று அழைப்பு விடுகின்றனர்.இப்படி ஒரு காட்சியை நீங்கள் இம்மலையில் தான் காண முடியும். அது மட்டுமின்றி , சித்தர்களும், பல சித்து விளையாட்டுகள் செய்து, மக்களை மகிழ்வித்து மகிழ்கின்ற மலை, எங்க திருக்குற்றால மலை என்று பெருமிதமாக பாடுகின்றார் கவிராயர். இந்த அழகான பாடல் இதோ : வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு க