பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, முதுமொழிக்காஞ்சி யில் சில சுவாரஸ்யமான பழமொழிகள் உள்ளன, நீட்டி முழக்கி சொல்லும் பாடல்கள் அல்ல இவை, சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்பவை (Short and Sweet), இதில் மொத்தம் 100 பழமொழிகள் கூறப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். இந்தப்பதிவில், என்னைக் கவர்ந்த பத்து பாடல்கள் பற்றிப் பார்ப்போம். அவை தண்டாப்பத்து என்ற அதிகாரத்தில் உள்ளன ( 91 - 100) . தண்டா என்றால் நீக்கம் என்பது பொருள் .. தண்டான் என்றால், விலக்க மாட்டான், வழுவாது நிற்பான் ,நீக்க மாட்டான் என்பன போன்ற பொருளைக் குறிக்கும். நமக்கு என்ன வேண்டுமோ, எதை விரும்புகின்றோமோ, அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என தண்டாப்பத்துப் பேசுகிறது ! ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்! கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் (உலகத்துக்கு ஒரு BUILD-UP வேணாமா? ராஜராஜ சோழ, ராஜ மார்த்தாண்ட என்ற தொனி ஞாபகம் வருகிறதா? ), எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன்,பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை கைவிட மாட்டான்...யோசித்து
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !
கருத்துகள்
கருத்துரையிடுக