ஆண்குரங்குகள் குற்றால மலையில் விளைந்து நிற்கின்ற, சுவை மிகுந்த, பழங்களைப் பறித்து, பெண் குரங்குகளுக்குத் தந்து கொஞ்சி மகிழ்கின்றன. பெண் குரங்குகள் அந்த அன்பில் மயங்கி, சில பழங்களை
கீழே சிந்துகின்றன. இந்த ஆனந்த காட்சியை கண்டு பெருமூச்சோடு எங்களுக்கு கீழே விழுந்த பழங்களையாவதுத் தாருங்கள் என்று வானுலக மக்கள் கெஞ்சுகின்றனர்.
குற்றாலமக்களோ, கீழே இறங்கி எங்கள் எழில் கொஞ்சும் மலைக்கு வாருங்கள்! என்று அழைப்பு விடுகின்றனர்.இப்படி ஒரு காட்சியை நீங்கள் இம்மலையில் தான் காண முடியும். அது மட்டுமின்றி , சித்தர்களும், பல சித்து விளையாட்டுகள் செய்து, மக்களை மகிழ்வித்து மகிழ்கின்ற மலை, எங்க திருக்குற்றால மலை என்று பெருமிதமாக பாடுகின்றார் கவிராயர். இந்த அழகான பாடல் இதோ :
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் !
..........மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் !
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர் !
..........கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர் !
இசை வடிவில் இந்தப்பாடலை பாட முயன்றிருக்கிறேன்.. அந்த லிங்க் இதோ :)
கருத்துகள்
கருத்துரையிடுக