தளும்பும் சத்தம் கேட்டு,
அந்தப் பழமொழியை
நினைவு கூர்ந்து
மெல்ல புன்னகைக்கிறேன்
நான் !
நிறைகுடம் நிறைந்து வழிகிறது
வேறொன்றுமில்லை !
என்கிறார்கள்
பெருமிதச் சிரிப்போடு !
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !
கருத்துகள்
கருத்துரையிடுக