முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திறவுகோல் குறிப்புகள்!

Quantity and Quality dont necessarily go hand in hand.. When quantity runs together with time, Quality takes a back seat. Quality blooms out of liberty and moves like a wind without a boundary ❤️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முதுமொழிக்காஞ்சி - தண்டாப்பத்து !

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, முதுமொழிக்காஞ்சி யில் சில சுவாரஸ்யமான பழமொழிகள்  உள்ளன, நீட்டி முழக்கி சொல்லும் பாடல்கள் அல்ல இவை, சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்பவை (Short and Sweet),  இதில் மொத்தம் 100 பழமொழிகள் கூறப்பட்டுள்ளன.  இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். இந்தப்பதிவில், என்னைக் கவர்ந்த பத்து பாடல்கள் பற்றிப் பார்ப்போம். அவை தண்டாப்பத்து என்ற அதிகாரத்தில் உள்ளன ( 91 - 100) .  தண்டா என்றால் நீக்கம் என்பது பொருள் ..  தண்டான் என்றால், விலக்க மாட்டான், வழுவாது நிற்பான் ,நீக்க மாட்டான் என்பன போன்ற பொருளைக்  குறிக்கும்.  நமக்கு என்ன வேண்டுமோ, எதை விரும்புகின்றோமோ, அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என தண்டாப்பத்துப்  பேசுகிறது !  ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்!            கடலால்  சூழப்பட்ட  இந்த உலகத்தில் (உலகத்துக்கு ஒரு  BUILD-UP வேணாமா? ராஜராஜ சோழ, ராஜ மார்த்தாண்ட  என்ற  தொனி ஞாபகம் வருகிறதா? ), எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன்,பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை கைவிட மாட்டான்...யோசித்து

பாரதியும் குள்ளச்சாமியும் !

பாரதியின் நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் இந்த வாரத்தில்,பாரதியின் வாழ்க்கைத்தேடல்களைப்  பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது. ஒரு மணி நேரத்தில்  எழுதி , பதிவேற்றிவிட்டேன்.(Pat on my back 😄 ) நம் எல்லோருக்குள்ளும் ஒரு தேடல் இருக்கிறது. அதிலும் இந்த நூற்றாண்டில் அறிவியல் கண்ணாடி கொண்டு பார்க்கும் ஆர்வம் மேலோங்கியதால் "இருக்கு ஆனா இல்ல" மாதிரியான குழப்ப மனநிலை மேலோங்குகிறது.இறுதியாக ஒரு குருவின் பார்வையில் அவரின் ஒரு வழிகாட்டுதலில் ஏதேனும் புலப்படுமா என்று சில ஆன்மீக குருக்களின் வழியின்  செல்லும் Trend-ம் இருக்கிறது. நம் பாரதியாருக்கும் அப்படி ஒரு ஆன்மீகத்தேடலும் வாழ்க்கைத்தேடலும் பலகாலம் கூடவேப் பயணித்திருக்கிறது.அவரின் பாணியில் அதைப்  பாட்டாக எழுதி இருக்கின்றார்.  பாரதியாரே என்னைப் போன்றப்  பலருக்கு குரு தான்.. ஆனால் அவருக்கே ஒரு குரு இருந்திருக்கின்றார்.  அவரின் குருவின் பெயர் குள்ளச்சாமி ☺️ காரணப்பெயர் மாதிரி தோன்றுகிறது அல்லவா? அவர் உண்மையான மனிதரா? அல்லது பாரதியின் கற்பனை குருவா என்று தெரியவில்லை.. ஆனால் சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த பாடல்களாக இருக்கின்றன பாரதியும்

இசைக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்ட தமிழ் மொழி!

  இசைக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்ட தமிழ் மொழி! கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? பல நூற்றாண்டுகளாக தமிழ்ப் பாடல்களை கோவில்களில் பாடுவது மறுக்கப்பட்டு வந்தபோது , தமிழ் இசை வளர்ப்பதற்காக தன்னலமற்ற அறிஞர்கள் சிலர் பெரு முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறார்கள். அவர்களை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால், நாம் கால இயந்திரத்தில் சற்று பின்னோக்கி சென்று நம் தமிழிசை ஏன் ஒடுக்கப்பட்டது / எப்படி ஒடுக்கபட்டது என்று  தெரிந்துகொள்வோம். அக்காலங்களில் தமிழிசை தமிழ்பக்தி இலக்கியங்கள் மூலமாகவே  வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழ்பக்தி இலக்கியங்கள் என்பது சைவம்,  வைணவம் என இரு சமயங்களை மையமாகக் கொண்டது. தமிழ் பக்தி இயக்கம் கி.பி. ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை தமிழகத்தில் செயற்பட்ட சமய,சமூக அரசியல் இயக்கமாகும். தமிழர்களின் பல சங்ககால விழுமியங்களை பறைசாற்றும் விதமாகவும், வைணவ சமயம் மற்றும் சைவ சமயம் ஆகியவற்றை முன்னிறுத்தியும்,  அக்காலப்பகுதியில் தமிழரிடையே செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களுக்கு எதிராகவும் தமிழ் பக்தி இயக்கம் அமைந்தது. தமிழகத்தில் ஆழ்வார்கள் வைணவ சமயத்தினையும், நாயன்ம