நிலா... வானம்...
நட்சத்திரம்
என்று பேசிக்கொண்டே
சென்ற என்னை
உனக்கு மழை பிடிக்குமா?
என்ற ரீதியில்
நிலம் அழைத்து வந்தாய் !!
தூறல்களையும் சாரல்களையும்
ரசிக்க வைத்தாய் !!!
நடை பழகும் குழந்தையாய்
மழை நடை பழகுகிறேன் ..
உன் விரலோடு விரல் கோர்த்தபடி...
என்னையும் அறியாமல் !!!
மழையோடு இழைய வைத்தாய்!
உருக வைத்தாய்!
கரையவும் வைத்தாய்!
தற்செயலாய் நிலம் நோக்குகின்றேன் !!!
அங்கே மழை இல்லை !
மழை நின்ற தடமும் இல்லை !
எங்கே மழை என்றேன்..
ஆச்சரியக்குறியோடு !!!??!!!
புன்னகை மட்டும் பூத்தாய்
மர்மமாய்!!!
இழைதல் , கரைதல்
எல்லாம் இப்போதும்
நிகழ்கிறதே என்றேன் விடாமல் !!!
" நீ நனைந்தது மற்றும் நனைவது
மழையில் இல்லை !! என்னில்
!! "
என்றபடி
அதே புன்னகையாய்
மீண்டும் பரிசளித்தாய்
கொஞ்சம் குறும்போடு !!
great rekha. Keep it up
பதிலளிநீக்குHi Bala..
பதிலளிநீக்குThank you :)