அவசரமாய் எழுந்து ,
வகுப்பறையில் கனவு கண்டு,
எதற்காகவோ ஏனோ
காரணமின்றி சிரித்து,
புத்தகங்களோடு மல்லுக்கு நின்று ,
இயந்திரங்களோடு போராடி ,
Circuits - உடன் திண்டாடி,
Computer முன்பு
மனனம் செய்த
Program -களை ஒப்பித்து ,
புரிந்து கொள்ளாமலே
பல விஷயங்களை உள்வாங்கி ,
தேர்வு தாளில் அதை
கடினப்பட்டு எழுதி முடித்து ,
Semester என்னும்
கிணறு தாண்டும் வைபவத்தை
கொண்டாடி ,
சின்ன சின்ன ஆசைகளை
கூட துறந்து ,
Calculator களுடன்
Placement கனவு ஒரு பக்கம் ...
Higher Studies கனவு ஒரு பக்கம் ...
என்று
இரண்டிற்கும் இடையில்
குழம்பி ...
குழம்பி ...
குழம்பி ...
அய்யோடா !
பொறியியல் வாழ்க்கை
ஏன்
பொறுமலாகவே
கழிகிறது ?
கருத்துகள்
கருத்துரையிடுக