முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பெருமிதப்பாய்  தனித்தனித்தீவுகளை  உருவாக்கியபின் பாலங்கள்  கட்டத்தெரியாமல்  திணறிக்கொண்டிருக்கிறேன்..   ஆழிப்பேரலை ஒன்று  கடந்து செல்கிறது காலுக்கடியில் சலனமே இல்லாமல்!!! 

Gaslighting!

எதிர்பாரா   நொடியொன்றில்   கூர்முனையால்  கிழித்துவிட்டு  " பார்த்து இருக்க  மாட்டாயா"  என்றேன்  கருணை பொழியும்  கண்களோடு!  காயங்களுக்கு  கட்டுப்போட்டபடி!    இப்போது  நீ  நன்றி சொல்ல  கடமைப்பட்டிருக்கிறாய்!   கொஞ்ச நேரம் காத்திரு!  கூர்தீட்டிவிட்டு  வருகிறேன்..  இந்த விளையாட்டு  எனக்குப்பிடித்திருக்கிறது!   😈    #gaslightingawareness #radiancefromreks
  காலையில் என்ன சமைக்கலாம்  இட்லி மாவு இருந்திருந்தால் சுலபமாய் இருந்திருக்கும்! 🥲 இன்றைக்காவது நடைபயிற்சி போக வேண்டும்  ஒரு நாய்க்குட்டி வளர்த்தால் என்ன?  நன்றாக தான் இருக்கும்  வீட்டை யார் சுத்தம் செய்வது? பேசாமல் காலையிலே நூடுல்ஸ் செய்வோமா?  யார் வந்து கேட்க போகிறார்கள்?  ஆமாம்.. சீனர்கள் என்ன  காலை உணவு எடுப்பார்கள்..  இந்தியன் இரண்டாம்  பாகம் பார்த்தால் என்ன ?  அதான் நல்லா இல்லையாமே?  முதல் பாகத்தில்  "அக்கடா" பாட்டு நல்லா இருக்குமே... இணையத்தில் போய் பாப்போம்..  நல்ல தரமான ஒலி/ஒளித்தரத்தில் கிடைக்குமா?  சனிக்கிழமை காலை எவ்ளோ ரம்யமா இருக்கு..  தினமும்  சீக்கிரம் எழுந்திருக்கணும் ! பரவாயில்லையே ! இவ்ளோ நேரம் அலைபேசி பாக்காம இருக்கோம்!  சீக்கிரம் அலைபேசிக்கு உறை மாற்றணும் !  இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு?  புட்டு செஞ்சு  வாழைப்பழத்தை  காலி பண்ணிடுவோம் நான் ஒரு ஐடியா மணி !  ஹி.. ஹி.. ஹி... "கண்களை மெதுவாக திறந்திடுங்கள் !"  ஹ...ப்பா...டா  ஒரு வழியா முடிஞ்சிடுச்சு!  தெளிவாய் இருப்பதாய்க்  காட்டி கொண்டேன் !  புன்னகையுடன் விடை பெற்றுக்கொண்டேன் 🙂  முதல் க

Kalinga Nardhana - காளிங்க நர்த்தனம்!

    I was probably five or six years old when I first saw the painting of "Kalinga Nardhana" ( காளிங்க   நர்த்தனம் ).I can still clearly recall how  appealing the painting was. T he artwork was done by the sister of my maternal grandfather. I've heard that she loved creating art and paintings, and that she would spend a lot of time exploring its various facets. Unfortunately, she regrettably passed away at a very young age. My grandfather was a kind brother who carefully secured many of her works. In her portrayal of "Kalinga Nardhana",  snake Kalinga was not in agony or in pain when Krishna was dancing on top of his head. He was having a blissful time with Krishna who dances with rhythm. That's how I envisioned the portrait, at least. My mother later exposed me to Krishna's stories, it was hard to believe that snake Kalinga could be evil. It completely contradicted the imagination of what I had in mind. After that, I interpret the story in my own
இட்டு நிரப்ப முடியாத  கருந்துளைக்குள் கவிதைகள்  கொட்டிக்கொண்டிருக்கிறேன்  நான் ! அழகாய் எழுதுகிறாய்  என்கிறார்கள்  உந்துவிசை  எதுவென  விசாரிக்கிறார்கள்  இயக்கமாய்  இங்கே  தோன்றுவதோ  இயக்குதலின் ஒரு கோணம்! இயக்குவிசையின்  ஒரு பரிமாணம்! வார்த்தைகள் கோர்த்து  பள்ளம் சரிசெய்ய  பணிக்கப்பட்டிருக்கிறது  அன்றாடம்! எது எப்படியோ.. பிரசவம் முடிந்த அன்னையாய்  தூங்கும் நேரங்கள் மட்டும்  ஆசீர்வாதம் 😌
உன்னால்  வாசிக்கவே  முடியாத  ஒற்றைக் கவிதை  என்னிடம் உண்டு ! காலந்தோறும்  அதன் வாசிப்பனுவம்  தேடி  என்னைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்  நீ!   ஒவ்வொரு  யுகத்தின்  முடிவில் என் ஒற்றைக்கவிதையின்  நீளம் கூட்டிடுவேன் நான்!  சுழன்று கொண்டே  இருக்க பிறந்தவர்கள் நாமும் பிரபஞ்சமும் 😌
காலமும் வேகமும்  கணக்கிடத்   தேவையின்றி   பறக்கத்   தெரியுமெனக்கு!  ஆனாலும்  சிறகுகளை கவனமாய்க் குறுக்கிக்கொண்டு  தத்தித் தத்தி நடக்கும்  எனக்கு  ஓட்டமும்  பழக்கிக்கொண்டிருக்கிறேன்  சிறகு விரிக்கத்  தயாராகும்  ஒரு திருநாளில்..  என் கால்களும் உடனிருக்கும்  உறுதியாய் ! இளைப்பாற  இறங்கும்போது  நிலத்தைப்    பற்றிக்கொள்ளும்  உரிமையாய் !  அதுவரையில்  இப்பெருவானம்  எனக்காய் காத்திருக்கக்கடவது😌    

நவீன சீதை!

பத்தினி  என்று நிரூபிக்கத் தேவை இல்லை  நவீன சீதைக்கு !  ராஜ்யத்தில்  பாதி ஜீவனாம்சம்  பெற்றுக்கொள்வாள்  சிங்கபெண்ணே  என்று  கொண்டாடப்படுவாள்! இன்ஸ்டாவில்  பல மில்லியன்  ஆதரவாளர்கள்  ஒன்று சேர்ந்திருப்பார்கள்..  யாரோ ஒரு கவிஞர்  சீதாயணம்  கூட எழுதக்கூடும்... முத்தாய்ப்பாய்  முதல் பிரதியை  ராமரே வந்து  பெற்றுக்கொள்ளுவார் ! 😌  
சும்மா தான் பேசினேன் ... திரும்ப திரும்ப  சொல்லிக் கொண்டே  இருந்தேன்.. வேலை பற்றி  அக்கறையாய்  விசாரித்தேன்  மதியம் என்ன சாப்பாடு ? ஆர்வமாய்க் கேட்டேன்  அரசியல் கூட பேச  முயற்சித்தேன்!  நான் பார்க்கவே  பார்க்காத உலகக்கோப்பை  கிரிக்கெட்  விளையாட்டு பற்றி  மும்முரமாய்   கருத்து சொல்ல வந்தேன்!  உன்னிடம்  பேசுவதற்கு.. பேச வைப்பதற்கு  எத்தனை  ஜாலங்கள் தேவைப்படுகிறது  எனக்கு?  ஆனாலும்  கடைசிவரை  சொல்லவில்லை!   ஞாபகப்புதையல்களில் சிறகடித்துக்கிடக்கும் ஒரு சிறு சிட்டுக்குருவி  இன்று  நிம்மதியாய் உறங்கும்  என்று !