கருப்பு வெள்ளை
நிழல்களுக்குள்ளே
உலகம் தேடும்
சாமானியன் நான் !
எதிர்பாராமல் நிகழ்ந்தது
வண்ணத்துப்பூச்சியின் வருகை !
நீலம் என்றது பச்சை என்றது..
வண்ணங்களை வகைப்படுத்தியது
வரிசையாய்...
ஒவ்வொரு நாளும் அறிமுகம் ஆயிற்று
ஒவ்வொரு வண்ணம்...
வான வில்லாய் மாறிற்று
என்னுலகம் ....
வண்ண குவியல்களுக்குள்ளே
அமிழ்ந்து கிடந்தேன்....
நிறங்களுக்குள்ளே
நிறைந்து கிடந்தேன்....
மறந்து போன கருப்பு வெள்ளை
என் சுயமாய்
தோன்றிய ஒரு நாளில்
வண்ணங்கள் வேண்டாம் என்றேன்
வண்ணத்துப்பூச்சியின் வருகையை
வேண்டாமென்றேன்....
உணர்ச்சிகள் உறைந்த வேளையிலே
கைகளில் ஏதோ பிசு பிசுப்பு...
உருகி வழிந்தன நீலமும் பச்சையும்
இன்னும் என்னென்னவோ நிறங்களோடு ...
நிமிர்ந்து பார்த்தேன் ..
நிறம் இழந்து பறந்து கொண்டிருந்தது
அந்த வண்ணத்துப்பூச்சி
இல்லை இல்லை
வண்ணங்கள் வேண்டாம் என்றேன்
வண்ணத்துப்பூச்சியின் வருகையை
வேண்டாமென்றேன்....
கனத்த மௌனத்தை
சுமந்தபடியே
பறந்து சென்றது
வண்ணத்துப்பூச்சி...உணர்ச்சிகள் உறைந்த வேளையிலே
கைகளில் ஏதோ பிசு பிசுப்பு...
உருகி வழிந்தன நீலமும் பச்சையும்
இன்னும் என்னென்னவோ நிறங்களோடு ...
நிமிர்ந்து பார்த்தேன் ..
நிறம் இழந்து பறந்து கொண்டிருந்தது
அந்த வண்ணத்துப்பூச்சி
இல்லை இல்லை
இப்போது
வண்ணங்கள் தொலைத்த
வண்ணங்கள் தொலைத்த
வெறும் பூச்சி அது !
கருத்துகள்
கருத்துரையிடுக