இயல்பு 😊

ஈர்க்கபடக்கூடாதென 
கவனமாய் தரப்பட்ட தகவல்கள் 
அகங்காரத்தின் 
மதில்கள் !
சாளரங்கள் வழியே 
ஒளிக்கற்றை 
ஊடுருவியபோதுதான் 
அழுந்தத்தொடங்கியது 
ஈரம் படிந்த 
சிறகுகளின் 
இறகுகள் !
ஒளியை நோக்கி 
நகர்வது 
பால்வழி அண்டத்தின் 
இயல்பாய் இருக்கையில் 
சுவர்களை 
கடப்பது
கடினமா என்ன?
சிறகுலர்த்தி 
உலாவிட 
உண்மையில் 
காரணம் ஒன்றும் வேண்டுமா? 😊








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் - 1