முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் !

வாடிய செடி  ஒருபோதும்  வாய்திறந்து கேட்பதில்லை!  மழைக்காக  மன்றாடுவதில்லை!  எதிர்பாரா சாரலில்  நனைந்து போகிறது  பூரிப்பில்!  மனிதர்களும்  சிலநேரங்களில்  வாடிய செடிகள் தான்! 😌😌😌
நான் எப்போதுமே  இப்படித்தான்  இருந்தேன் !  ஏதேதோ  வர்ணங்கள் பூசி  என்னை மெருகேற்றி  உருவகித்திருந்தாய்  கற்பனையில் !    நான் நிறம் மங்கிவிட்டதாய்  குறை கூற ஆரம்பித்தாய்  உன் கனவில்  பெய்த மழையில்!  எதுவுமே நிகழ்ந்திராதபோது  எப்போது நிகழ்த்தியவனானேன் ?  ஒன்றுமே  புரியவில்லை எனக்கு!  நான் எப்போதுமே  இப்படித்தானே  இருந்தேன்???
எப்போதோ  தீர்ந்து போன ஒன்றை  எப்படிப் பேசித் தீர்ப்பது ?   தீர்ந்து போவதென்பதே  கற்பனை தான்..  தீர்ந்து போவதற்கு  முன்பு கூட  அங்கே எதுவும்  வாய்த்திருக்கவில்லை..  மொழிக்குப் புலப்படா  ஒரு மௌனக்குவியல்  வெற்றிடத்தை வெறுமையாய்   நிரப்ப  மனமின்றி  "இதுவும் கடந்து போகும் "  என்று  வார்த்தைகளை அடுக்கி வைக்கிறது!  உண்மையில் எதுவும்  கடந்து செல்வதில்லை  கடக்கப்படுகிறது!
எப்போதாவது ஒருநாள்  நன்றாக இருக்கிறாயா ?  என்று   கடமைக்காகக் கேட்பேன்!   நீ நலமாயில்லை  என்று மட்டும் கூறிவிடாதே!   அந்த பதிலை  எப்படி எதிர்கொள்வதெனத்   தெரியாது எனக்கு! பதிலுக்காகக்  காத்திருக்கும்  ஒவ்வொரு நொடியும்  பதட்டமாய் இருக்கிறது!  கருணையோடு  என் இயலாமையைக்  கடந்துவிடு   "நல்லாயிருக்கேன்" என்ற பதிலோடு.. உன் வெற்றுப்புன்னகையைப்  பார்க்காதவாறு   கிளம்பிவிடுவேன்  உரையாடலை  சீக்கிரம்  முடித்துக்கொண்டு!  

சிலந்தி!

சிலந்தி எலிவளைக்குள் உழல்வது  அன்றாடமானபின் வறட்டு வாழ்வின்  ஆரம்பப்புள்ளியாகிறது  கண்டும் காணாமல்   விடப்பட்ட  இடைவெளியில்  வலை  பின்னிச்செல்லும்  சிலந்தி!