முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பூக்களால்  அலங்கரித்து, தன்னைத்தானே ரசித்துக் கொள்கின்றன இந்த மரங்கள்!  அதிலும்  ஆற்றுப்படுகையில்  அசைந்தாடும்  மரங்கள்  இன்னும்  சற்றுக் கூடுதலாக  வரம்பெற்று  வந்தவை போலும்! ஓடும் நீரில் பிரதிபலிக்கும்  பிம்பத்தை  ஓரக்கண்ணால்  பார்த்துக்கொண்டு, மலர்க்கப்பல் உதிர்த்து  விளையாடும்  சிறுமிகள்  இம்மரங்கள் ! ஈரக்காற்றின் இதத்தில்  அவ்வபோது  சிலிர்த்து நதியின் கரையில் வேர்க்கொலுசுகள்  நனைத்து ஆரவாரிக்கும் அழகுப் பதுமைகள்  இம்மரங்கள் !  இயற்கையால்  ஆசிர்வதிக்கப்பட்ட  தருணங்களில் ஒன்று! இந்த வசந்த காலமும், இன்முகத்தோடு  வரவேற்கும்  இந்த மலர்களும்!

Shades of Grey !! - By Reks

அழகுப் பொருட்கள்  அணி வகுக்கும் அலமாரியும், அருங்காட்சியகம் போல்  அலுங்காமல்  இருக்கும் வீடும்,  எப்போதும் தருவதில்லை   பொம்மைகள்  இறைந்து கிடக்கும் வீட்டின் அழகை !!!    -- ரேகா

நான்!

நான் என்பது  நான் மட்டுமே அல்ல..  ஒரு  உடைந்த கண்ணாடியில் காட்டும்  பல சிதறுண்ட துண்டுகளில் , தெரியும் பிம்பங்களைப் போல , பல "நான்"களின் தொகுப்புதான் "நான்! " உங்களைக்கவர்ந்த நானும்,   விலகி நடக்க உட்படுத்திய  நானும் நானே தான்..  சிங்கம் போல் கர்ஜித்தவனும்  நான் தான்.. சிறு பூனைக்குட்டியாய், குரல் வெளியேக்கேட்காமல்  கத்தியவனும் நான் தான்.. !  சாரல் மழையில் கைப்பிடித்து, இசை ரசித்து நடந்தவனும்   நான் தான்..  யாரோவைப் போல், ஒதுங்கிச் சென்றவனும்  நான் தான் ..  முடங்கிக்கிடப்பவனும்  நான் தான்..  பம்பரமாய்ச்   சுற்றிச் சுழல்பவனும்  நான் தான்..  எல்லைகளை  வகுத்துக்கொள்வேன் ! மீறுவதற்கான  திட்டமும் தீட்டுவேன்!  நான் மட்டும் போதும் எனக்கு ! சில நேரங்களில்..  உலகமே வேண்டுமெனக்கு!  பல நேரங்களில்..  "உலகம் அழகானது"  என்று மகிழ்ந்திருந்த  அடுத்த கணத்தில்  சலிப்புற்றுக் கடுப்பாவேன்..  அதிகார ஒடுக்குமுறை பற்றி குமுறிக்கொள்வேன்..  ஆதிக்கம் செய்வதற்கானக்  காய்களையும் நகர்த்துவேன்!  என்னை இயக்குபவன் அந்த "நான்"  களில் ஒருவன் அல்ல !  என்னைக் கடந்து செ