முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திறவுகோல் குறிப்புகள்!

நீங்கள் இதுவரையில் உங்களுக்கு கிடைத்த பெரும் உதவிகளை யோசித்து பாருங்கள்! அவை எல்லாம் நீங்கள் உங்களுக்கு செய்த உதவிகளாக தான் இருக்கும் ! 😊

குற்றாலக் குறவஞ்சி (01) வானரங்கள் கனி கொடுத்து !

உலக மலைகள் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பதினோராம் தேதி ( December 11) கொண்டாடப்படுகிறது. நம் தமிழ் சமூகம் மலைகளைப் பற்றி பாடல் இயற்றிக் கொண்டாடி இருக்கிறது.. திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய "குற்றாலக்குறவஞ்சி", சிறப்பு மிக்க குற்றால மலையைப் பற்றியது.. அதில் ஒரு அழகான காட்சி! ஆண்குரங்குகள் குற்றால மலையில் விளைந்து நிற்கின்ற, சுவை மிகுந்த, பழங்களைப் பறித்து, பெண் குரங்குகளுக்குத் தந்து கொஞ்சி மகிழ்கின்றன. பெண் குரங்குகள் அந்த அன்பில் மயங்கி, சில பழங்களை  கீழே சிந்துகின்றன. இந்த ஆனந்த காட்சியை கண்டு பெருமூச்சோடு எங்களுக்கு கீழே விழுந்த பழங்களையாவதுத் தாருங்கள் என்று வானுலக மக்கள் கெஞ்சுகின்றனர். குற்றாலமக்களோ, கீழே இறங்கி எங்கள் எழில் கொஞ்சும் மலைக்கு வாருங்கள்! என்று அழைப்பு விடுகின்றனர்.இப்படி ஒரு காட்சியை நீங்கள் இம்மலையில் தான் காண முடியும். அது மட்டுமின்றி , சித்தர்களும், பல சித்து விளையாட்டுகள் செய்து, மக்களை மகிழ்வித்து மகிழ்கின்ற மலை, எங்க திருக்குற்றால மலை என்று பெருமிதமாக பாடுகின்றார் கவிராயர். இந்த அழகான பாடல் இதோ :  வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு க

வயிறோடு ஒரு உரையாடல் !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ! அவ்வையாரின் நல்வழி நாற்பதில் ஒரு நகைச்சுவையான பாடல் உள்ளது. தினமும் சுவையாக சாப்பிட்டாலும், தினம் தினம் வகை வகையாய் உட்கொள்ளும் வயிறை நோக்கிப் பாடுவதாய் அமைந்த பாடல்..  ஒருநாளும் நீ உணவை விடமாட்டாய், இரண்டு நாட்களுக்கு போதுமானதாய் சாப்பிடவும் உன்னால் முடியாது. என் துன்பங்களுக்கெல்லாம் நீ தான் காரணி.. அதையும் நீ உணர மாட்டாய் ! உன்னோடு வாழ்வதே கடினம் என்று அலுத்துக்கொள்வதாய் அமைந்த அழகான பாடல்.. இந்த புத்தாண்டில், நாம் அனைவரும் சரிவிகித உணவை உட்கொள்ள Resolution எடுத்திருக்கும் இந்த வேளையில், இந்தப்பாடலை நினைவில் கொள்வோம்.. வயிற்றோடு சற்று மல்லுக்கட்டுவோம் 😊 அந்தப் பாடலை  மெட்டமைத்துப்பாட முயன்றிருக்கிறேன்.. அந்த பாடல் இதோ:  My Channel