நிலா ... வானம் ... நட்சத்திரம் என்று பேசிக்கொண்டே சென்ற என்னை உனக்கு மழை பிடிக்குமா ? என்ற ரீதியில் நிலம் அழைத்து வந்தாய் !! தூறல்களையும் சாரல்களையும் ரசிக்க வைத்தாய் !!! நடை பழகும் குழந்தையாய் மழை நடை பழகுகிறேன் .. உன் விரலோடு விரல் கோர்த்தபடி ... என்னையும் அறியாமல் !!! மழையோடு இழைய வைத்தாய் ! உருக வைத்தாய் ! கரையவும் வைத்தாய் ! தற்செயலாய் நிலம் நோக்குகின்றேன் !!! அங்கே மழை இல்லை ! மழை நின்ற தடமும் இல்லை ! எங்கே மழை என்றேன் .. ஆச்சரியக்குறியோடு !!!??!!! புன்னகை மட்டும் பூத்தாய் மர்மமாய் !!! இழைதல் , கரைதல் எல்லாம் இப்போதும் நிகழ்கிறதே என்றேன் விடாமல் !!! " நீ நனைந்தது மற்றும் நனைவது மழையில் இல்லை !! என்னில் !! " என்றபடி அதே புன்னகையாய் மீண்டும் பரிசளித்தாய் கொஞ்சம் குறும்போடு !!
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !