சில நேரங்களில் ஒரு முயற்சியில் இறங்கும்போது, வரும் இடர்பாடுகள் நமக்கு அயர்ச்சியை உண்டாக்குகிறது . சந்தேகங்களைத் தருகிறது. ஒரு தளர்ச்சியில் சிக்க வைத்து விடுகிறது அனுபவங்கள் என்ற " சூழல் தரும் சுழலில் " மாட்டிக்கொண்டு, பொது சமூகம் நம்முள் பதித்து வைத்திருக்கின்ற அனுமானங்களை வைத்து, நம்மை நாமே தினமும் எடை போட்டு, நமக்கு நாமே மதிப்பெண் கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு சிறிய தடங்கல் கூட பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது.. இது நம்மில் பலருக்கும் இயல்பான ஒன்று. சரி.. இவை எல்லாம் தவிர்க்க முடியாதவை . ஆனால் தடங்கல் வந்தால் என்ன செய்வது? துவண்டு விடாமல் எப்படிக் கையாள்வது? ஆறு அறிவு இருக்கும் நமக்கு, Mr.காளை மாடு திமிலில் கைபோட்டபடி, நம் வள்ளுவர் Class எடுக்கும் தருணம் தான் " மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து " என்ற குறட்பா! இது இடுக்கணழியாமை அதிகாரத்தில் வருகிறது. கல்லும் முள்ளுமாய் கடினமான வழிகளில் எல்லாம் ,வண்டியை இழுத்துச் செல்லும் ஒரு காளை மாட்டிற்கு நம்மை மாதிரியான குழப்பங்கள் எதுவும் இல்லை.. complaints இல்லை.. C onseque