தட்டை மனநிலை தட்டை மனநிலை எல்லாவற்றையும் ஒரு தளத்தில் பார்க்க முனைகிறது.. அந்த மனநிலைதான் அரசு பள்ளியில் ஒரு அறச்சீற்றம் கொண்ட ஆசிரியருக்கு சேர்ந்து குரல் கொடுக்கும் துணிவை தகர்க்கிறது.. ஏன் இந்த தேவை இல்லாத வேலை? எங்களை போலவே இருக்க வேண்டியது தானே என்று குழப்புகிறது. சுதந்திரமான சிந்தனைவாதியைப் பார்த்து கடிவாளம் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கிறது! ஒரு பிரபலதிரைப்படத்தை ஒரு எழுத்தாளர் வேறொரு கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் போது சீற்றம் கொள்கிறது. கேள்விகள் ஏன் கேட்கிறாய்? பிடிக்கவில்லை என்றால் பேசாதே என்ற மந்தப்படுத்துகிறது.. ஒற்றை கோணத்தில் அணுகுதல் மாற்றத்திற்கு எப்படி வழிவகுக்கும்? மரபையும் புனிதப்படுத்துதலையும் ஒரு மாற்று சிந்தனையாளரை, கட்டுக்குள் வைக்க ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறோம்! பொதுப்புத்தியில் இருந்து விலகிச்செல்லும் ஒரு கேள்வியை அகங்காரத்தின் நீட்சியாக பார்க்கிறோம்.. மந்தையில் இருந்து விலகிச் செல்லும் ஆடு என்று பதற்றம் கொள்கிறோம்.. ஆனால் உண்மையில் கேள்விகள்தான் அடுத்த மனிதனின் சிந்தனையை தூண்டுகிறது.. இப்படி ஒரு கோணம் இருக்கிறது என்பதை கவனிக்க
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !