குறிப்பிட்டுச்சொல்ல எதுவும் இல்லை.. குறிப்புகள் எதுவும் தயாரிக்கவில்லை.. ஆறுதலோ அரவணைப்போ தற்சமயம் தேவை இல்லை.. சலனமற்ற மனவெளியில் நினைவலைகளின் மடிப்புகளில் விதைக்கப்பட்ட நீ என்றோ ஒருநாள் முகிழ்த்தெழும்போது எப்படி இருக்கிறாய்? என்ற கேள்வியோடு நீ அருகில் வந்தால் போதும் !
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !