சேர்த்து வைத்திருக்கும் அகந்தையோடு தயாராக இருக்கிறேன் ! எப்போதோ சந்திக்க வரும் சிறு பறவைக்காக.. !! சிறகுகளை எல்லாம் பலமிழக்க செய்தபின் ஒரு கைப்பிடி நெல் தந்து, பெருமிதம் நிரப்பிக் கொள்வேன் ! இன்றிரவு நிம்மதியாக உறங்குவேன்! சிறுபறவை தத்தி தத்தி நகர்ந்து செல்கிறது ! மறுபடி சிறகு விரிக்க சிறிது நாட்கள் ஆகும் ! அதைப் பற்றி எனக்கென்னக் கவலை?
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !