முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புள்ளி

இது மையமும் அல்ல  முற்றும் அல்ல  புள்ளி மட்டுமே  இப்போது! ஆயினும்  வெறும் புள்ளியென  ஒதுக்கிவிடலாகாது !!! புள்ளிகளாய்க்  குவியலாம் !! கோடுகளாய்க்  கோர்க்கலாம் !! பிறிதொரு காலத்தில்  பெருஞ்சுவராய்க்   கூடப் பெருகலாம்.. கேள்விக்குறிகளின்  துணையோடு !!! அல்லது  முற்றிய  முற்றுப் புள்ளியாய்  முடிந்தும் போகலாம்.. வேண்டியவை எல்லாம்  அழகழகாய்  ஆச்சர்யக்குறிகள்  அவ்வபோது ... மற்றும்  காற்புள்ளிகளும்  அரைப்புள்ளிகளும்  கண்டும் காணாமல்  போகட்டும் !!! தொடர்புள்ளியில்   தொடரட்டும்  காலச் சக்கரம்  தயக்கமின்றி .... அதுவரை  அந்தப் புள்ளி வெறும் புள்ளியாகவே புதைந்திருக்கக்  கடவது !!! :)