முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மழலைக் கோப்பு

ஏதேதோ வரைந்து காட்டுகிறேன்... வண்ணங்கள் தீட்டுகிறேன்... உன்னிடம் பெருமை பேசும் ஆர்வத்தோடு... கோடுகளாலும் கோளங்களாலும் காகிதம் நிறைக்கிறாய் நீ... ரவிவர்மாவின் மும்முரத்தோடு  ... சரியான போட்டி தான்... உன் முயற்சிக்கும் என் வளர்ச்சிக்கும்.. நீ வரைந்த ஓவியங்களை கோப்புகளிலும் நான் வரைந்த"ஏதோ"க்களை குப்பைத் தொட்டியிலும் எப்போதோ சேர்த்து விட்டேன்... உன் மழலைக் கோப்புகளின் சில பக்கங்கள் என் கர்வம் அசைத்துப் போனதாக இருக்கட்டும் !!!  பின்னாளில் சிரித்துக் கொள்வேன் !!!   

இன்னும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை!

ஜாடைப் பேச்சுக்கள் ! கேலி செய்யும் தோழர் கூட்டம் ! நமக்கு மட்டுமே உரித்தான வசீகர புன்னகைகள் .... நேர்மையாய் சந்திக்க மறுக்கும் நமது விழிகள் ... சந்திக்கும் நேரங்களில் நீடிக்கும் எதிர்பார்ப்பு ! இருவருக்குமே பகற்கனவு ஒரே  மாதிரியாய்... இருவருமே இருவரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு.. என்ன இருந்தும் என்ன இன்னும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை!